Ad Code

தேனீ பெட்டிகள் அமைப்பதற்கான இடத்தேர்வு

Site selection for setting up bee hives



நீங்கள் தேனீ வணிகரீதியாகவோ என்றாலும் சரி வீட்டு உபயோகத்திற்க்காகவோ அல்லது  மகசூலை பெருக்குவதற்காக வைப்பதாகவும் இருந்தாலும் சரி இந்த இடத்தேர்வு என்பது மிக முக்கியமானது . எனவே தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கு தேனீ வளர்ப்போருக்கு ஏற்ற இடமாக இருக்கவேண்டும் .


👉 இயற்கையிலே தேனீக்கள் எங்கு அதிகமாக உங்கள் பண்ணைக்கு அருகில் காணப்படுகிறதோ அங்கு தேனீ பெட்டிகள் வைக்கலாம் .


👉 நீங்கள்பெட்டி வைக்கும் இடத்திலிருந்து குறைந்தது இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் மகரந்தம் கிடைக்கும் மரங்கள் பூக்கள் கொடிகள் இருந்தால் தேனிக்கள் கூட்டை காலி செய்யாது நமக்கு தேன் மகசூலும் அதிகம் கிடைக்கும் .


👉 நீங்கள் தேனீ வளர்ப்பில் வெற்றிபெறவேண்டும் என்றால் தேனீ பெட்டி வைக்கப்போகும் இடத்தில சில ஹெக்ட்டர் அளவிற்காவது தேனீக்களுக்கு உணவு தரும் மரங்கள் இருக்கவேண்டும் . அந்த பயிர்களில் மகரந்தம் , மதுரம் தரமாக தரக்கூடிய பூக்கள் இருக்கவேண்டும் .தேனீக்களுக்கு புழுக்களை வளர்க்கவும் மகரந்தங்கள் அதிகம் தேவைப்படும் 


👉 தேன் கூட்டின் வெப்ப நிலையை சரி செய்யவும் அரசக்கூழ் தயாரிக்கவும் மற்றும் தேனொட கெட்டித்தன்மையை குறைக்கவும் தேனீக்களுக்கு நீர் மிகவும் அவசியம். எனவே தேனீ பெட்டிக்கருகில் ஒரு கிணறோ , ஓடையோ , வாய்காளோ இருக்கவேண்டும் ஒருவேளை இல்லையெனில் அதற்கான அமைப்பை ஏற்படுத்தவேண்டும் . 

👉 அதிக வெயில் அதனால் ஏற்படும் வெப்பம் தேன் அடை உருகுவதற்கு வாய்ப்புண்டு அதிக காற்று உள்ள இடம் தேனீக்கள் மகரந்தம் சேகரிப்பதையும் ஆயுளை குறைத்துவிடும் . எனவே இந்த மாதிரியான இடங்களை தவிர்த்துவிடவேண்டும் .

👉 பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்தும் இடங்களில் வைக்கக்கூடாது 

👉  தேனீக்களின் கொட்டிற்கு கால்நடைகள் இலக்காவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு அருகே தேனீப் பண்ணையைப் பள்ளி, சந்தை போன்ற பொது இடங்களிலிருந்து போக்குவரத்து சாலையை விட்டும் குறைத்து 100 மீட்டர் தள்ளியே அடைக்க வேண்டும். தேனீப் பண்ணையை வீட்டிற்கு அருகில் அமைக்க நேரிட்டால் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி தர வேண்டும். இதனால் தேனீக்களால் மனிதர்களுக்குக் கூடிய வரை எவ்விதத் தொந்தரவும் இருக்காது

👉 ஓவுவொரு தேன் பண்ணைக்கும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இருக்கும்மாறு பார்த்துக்கொள்ளுங்கள் 

Reactions

Post a Comment

0 Comments