Ad Code

கலப்பட தேனை எப்படி கண்டுபிடிப்பது இதோ சில வழிகள்

Here are some ways to find blended honey





இந்த உலகத்தில் கெட்டுபோகாத ஒரு உணவுப்பொருள் இருக்கும்மெனில் அது தேன் மட்டுமே . விருந்தானாலும் சரி மருந்தானாலும் சரி தேன் ஒரு முக்கியமான பொருள் . முன்பெல்லாம் காட்டிலிருந்தோ அல்லது மரங்கள் அல்லது பொந்துகளிலிருந்து தேன் எடுப்பார்கள். தற்பொழுது தேனீக்கள் வளர்த்து தேன் எடுப்பது அதிகமாகிவிட்டது . கூடவே கலப்படமும் நடப்பதாக கூறப்படுகிறது . சுலபமாக கலப்படம் செய்வதில் தேன்தான் முதலிடம் . இந்திய உணவு தர கட்டுப்பாடு கொடுத்திருக்கும் கட்டுப்பாடுகளை லாபத்திற்காக மீறும் பொழுது தேனின் சுவையும் அதன் மருத்துவத்தன்மையும் காணாமல் போய்விடுகிறது . எல்லாம் சரி சுத்தமான தேனை எப்படி கண்டறிவது ?  அதற்கு சில சுலபமான வழிகள்  உள்ளன அவற்றை பார்ப்போம் .

சுத்தமான தேனை எப்படி கண்டறிவது ?

1) உங்களுடைய கட்டை விரலில் ஒரு சொட்டு தேனை விட்டு பாருங்கள் தூய தேன் அப்படியே நிற்கும் மற்றவை பரவும் அல்லது கிழே வழிந்தோடும்.


2) தூய தேன் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை சாப்பிடும்பொழுது அதன் சுவை நீண்ட நேரத்திற்கு இருக்காது அதன் நிறமும் நாக்கில் ஒட்டியிருக்காது .


3)ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு சொட்டு தேனை விடவும் அது அப்படியே கரையாமல் பாத்திரத்தில் தங்கினால் சுத்தமான தேன் .



4) உண்மையான தேனில் ஈரப்பதம் இருக்காது ஒரு தீக்குச்சியை எடுத்து தேனில் தொட்டு உரசவும் உடனே பற்றிக்கொண்டால் சுத்தமான தேன் 


5) தேனின் அடர்த்தி ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு கண்ணாடி குடுவையில் தேன்னை போட்டு வைக்கவும் சிறிது நேரம் கழித்து பார்க்கும் பொழுது அதன் அடுக்கு மாறியிருந்தால் அது கலப்படம் 


6) ஒரு டம்ளரில் தேனை விட்டு அதனுடன் நீர் கலந்து 2 சொட்டு நீர் விட்டு அந்த கலவை நுரைத்தால்  அது கலப்பட தேன் .

7)

தேனிற்கு அடர்த்தி அதிகமாக இருக்கும் ஒரு ஸ்பூனில் எடுத்து விடும்பொழுது மெலிய நூல் இழை போன்று இறங்கும் 


8) ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு சொட்டு தேனை விடுங்கள் பின்புறம் கசியாமல் இருந்தால் அது நல்ல கலப்படமற்ற தேன் 

Reactions

Post a Comment

0 Comments