Ad Code

தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கூடுகளை நிறுவும் முறை

 Equipment for beekeeping



1.தேனீ பெட்டி

2.புகைப்பான்

3.கையுறை & முகவலை

4.கத்தி

இம்மூன்றும் நிழலான இடமும் இருந்தால்

தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்.

1.தேனீ பெட்டி: 

இது, ஒரு நீளமான சாதாரண”மர”  பெட்டியாகும். இதன் மேல் வாட்டில் 6 அடுக்குகளை கொண்டுள்ளது.  தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது. மேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டை அமைப்பதற்கு தேவையான இடத்தை கொண்டுள்ளது. தேனீ தன் கூட்டை கட்ட ஏதுவாக, அடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல் நல்லது.

2.புகைப்பான் : 

    இது தேனீ வளர்ப்பில்,  இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும். இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம். இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.புகையை உண்டாக்க தேங்காய் நார்களை பயன்படுத்துவது நல்லது

3.கையுறை& முகவலை

  நாம் வேலை செய்யும் பொழுது, நம் கைகளை மற்றும் முகத்தை தேனீக்களிடமிருந்து பாதுகாக்க உதவும்.

4.கத்தி : 

    மேல் அடுக்குகளை தனிப்படுத்துவதற்கும் தேன் கூடுகளை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.


தேன்கூடுகளை நிறுவும் முறை



தேனீ வளர்க்கபோகும் பகுதி , நல்ல நிழல் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும், மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும். எனெனில் அப்பொழுதுதான், மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.

தேன் கூட்டிற்குள் எறும்பு ஏருவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள் தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாரு இருத்தல் வேண்டும்.

வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை, கிழக்கு திசை நோக்கி அமையுமாரு தேன் கூட்டை அமைக்க வேண்டும்.

தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், ஏனைய விலங்குகள் , பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.

தேனீ கூட்டில்அதிக நெரிசலை தவிர்க்க காலனி நிர்வாகம் அவசியம்

தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.

பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு, ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை, மற்றும் ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க  தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.

Reactions

Post a Comment

1 Comments

  1. There are games that pay more, there are games that pay much less. No matter which game you select, everyone confirms that winning money at an internet casino is feasible. If you propose to play online blackjack actual money you should know some basics and a good blackjack strategy will increase your winnings. Social casino’s success has an ability to attract 코인카지노 an older and non-traditional gaming audience. A Poker audience share all the time overlap to that of conventional gamer.

    ReplyDelete