Ad Code

கொசு தேனீ வளர்ப்பு

Stingless Beekeeping



கொசு தேனியிடம் இருந்து கிடைக்கக்கூடிய தேனின் விலை குறைந்தது கிலோ 3000 ரூபாய் ஆகும்.  சிறந்த தேனீக்களாகும் இதற்க்கு கொடுக்குகள் கிடையாது ஸ்டிங்லெஸ் பீஸ் அல்லது டாம்மர் பீஸ் என்று அழைப்பார்கள் . இந்த வகை தேனீக்கள் அளவில் மிக சிறியதாக இருப்பதால் சின்ன சின்ன பூக்களில் தும்பை , துளசி , வேப்பம்பூ போன்ற பூக்களில் அடியில் வரை சென்று தேன்னை எடுக்கும் இதனாலேயே இந்தவகை தேனிற்கு  அதிக மருத்துவ குணம் உண்டு 


இந்தவகை தேனீக்கள் அனைத்தையும் தனித்தனியாகத்தான் சேமிக்கும் அதாவது மகரந்தத்திற்கு தனி அறை தேனிற்க்கு  தனி அறை இருக்கும் . இதனால் மற்ற தேனீக்களை போன்று இதில் தேன் எடுக்க முடியாது . தமிழ் நாட்டை பொறுத்தவரை ஒரு பெட்டியில் வருடத்திற்க்கு 200 முதல் 300 கிராம் வரைதான் தேன் கிடைக்கும் 


கொசு தேனீ பெட்டி 

இதற்க்கு சின்ன தேனீ பெட்டிதான் தேவைப்படும் 



தேனீக்கள் வந்து போக கூடிய அளவிற்க்கு மட்டுமே வாசல் வைத்திருக்கும் மற்ற பகுதிகள் அனைத்தையும் அது அடைத்துவிடும் தேனீ பிசின் வைத்து அடைத்துவிடும் அதற்க்குள் பல்லி , எறும்பு எதுவுமே போகமுடியாது அதுவே தன்னை பாதுகாத்து கொள்ளும் . இவ்வகை தேனீக்களை அடிக்கடி இடம் மாற்றக்கூடாது 


கொசு தேன் எடுக்கும் முறை 

மற்ற பெட்டிகளில் சுலபமாக பெட்டியை திறக்கலாம் ஆனால் 



கொசு தேனீ பெட்டியை திறப்பது சிரமம் சுற்றியும் பிசின் பூட்டு ஒட்டி வைத்திருக்கும் , கத்தியை வைத்து நெம்பிதான் எடுக்க முடியும் . 



இதன் தேன் கொஞ்சம் டார்க் கலரில் இருக்கும் , அதன் அருகில் மகரந்தம் சேமிக்கும் அறை இருக்கும் அதன் பக்கத்தில் முட்டை இருக்கும் 


இதை பராமரிப்பது சுலபம் அடிக்கடி திறந்தும் பார்க்கக்கூடாது. மூணு மாதத்திற்கு ஒருதடவை இதிலிருந்து தேன் எடுக்கலாம் . ஒரு பெட்டியில் இருந்து 25 முதல் 50 கிராம் வரை தேன் எடுக்கலாம் .

Reactions

Post a Comment

0 Comments