Beekeeping - Learn about bee venom treatment
தேனீ வளர்ப்பில் தேனீக்கள் மூலமாக எடுக்கக்கூடிய பொருட்களில் விலை உயர்ந்தது தேனியோட விஷம்தான் . ஒரு தேனீ பெட்டி வைத்து விஷம் எடுத்தால் அதில் என்ன என்ன நன்மைகள் இருக்கிறது என்றுபார்த்தால் ,
1) தேனீக்களின் விஷம் நம் உடம்பிற்குள் சென்றால் எதிர்ப்பு சக்தி கூடி ஆயுள் கூடுகிறது . ப்ரெஸ்ஸருக்கு, சுகருக்கும் மிகவும் நல்லது , ப்ரெஸ்ஸருக்கு சைனாவில் அட்மிட்செய்து கொட்டவிடுவார்கள் . குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு முதுகுத்தண்டு வலிவரும் அவர்களுக்கு முதுகுத்தண்டில் கொட்டவிடப்பட்டு குணமாகிறது மேலும் மூட்டு வலிகள் இருந்தால் குணப்படுத்துகிறது . இந்த மூட்டு வலிக்கான சிகிச்சை மதுரையில் உள்ள விபீஸ்ல் கொடுக்கப்படுகிறது
2) BEE VENOM THERAPY
இது நாம்ம நாட்டில் அதிகமாக இல்லை குறைவாக இருக்கிறது . கேரளாவில் இந்த தெரபி இருக்கிறது. சைனா , அமெரிக்க , ரஷ்யா போன்ற நாடுகளில் இந்த தெரபிக்கு என்றே மருத்துவ மனைகள் உள்ளன. சீனாவில் எதிர்ப்பு சக்தி வரவேண்டும் என்பதற்க்காக இதை மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்கின்றனர்
தேனீக்களை கொட்டவிடுவது எப்படி
தேனீயை பிடுச்சுட்டு நமக்கு எங்க தேவை படுதோ அங்க தேனியோட பின்பக்கத்தை வைத்து தொட்டால் கொட்டிவிடும் , தேனீக்களின் பின்பகுதியில்தான் கொட்டுவதற்குரிய கொடுக்கு இருக்கிறது . நம்மை கொட்டுகிற தேனீ இறந்துவிடும் அதனாலேயே நிறைய தேனீக்கள் கொட்டாது , நிறைய சாப்பாடு சாப்பிட்டிருந்தாலும் கொட்டாது , கொஞ்சம் கூடுதல் தொந்தரவு கொடுத்தால்தான் கொட்டும் . கொட்டியவுடன் கொடுக்கு நம் உடம்போடு ஒட்டிக்கொள்ளும் அதிலிருந்து விஷம் நம் உடம்பிற்குள் போகும் உள்ளே சென்றவுடன் நம் குருதி நாளங்களை விரிவடையச்செய்யும் இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது .
அதேசமயம் நாம் எல்லா தேனீக்களிடமும் நாம் கொட்டு வாங்கமுடியாது . மலைத்தேனியிடம் கொட்டு வாங்கினால் அதில் இருந்து வரும் வாசம் மற்ற மலைத்தேனீக்களையும் இழுத்துவந்துவிடும் . இந்த BEE VENOM THERAPY க்கு இந்திய (அடுக்குத்தேனீ ) தேனீக்களே சிறந்தது. முதல் தடவை நரம்பில் செய்யக்கூடாது இரண்டாவது தடவை நரம்பில் செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும் . லச்சத்தில் ஒருவருக்கு இந்த bee venam therapy ஒவ்வாமை ஏற்படுத்தும் அப்படி வந்தால் உடனடியாக ஒரு கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு 2 டி ஸ்பூன் தேன் கலந்து கொடுத்தால் சரியாகிவிடும் .
0 Comments