Bee life is an awe
மிகவும் கட்டுக்கோப்பானது இந்த தேனீக்களின் வாழ்க்கை முறை , இங்கே நடப்பது பெண்களின் ஆளுமை மட்டுமே . ராணி தேனிக்காக பணிவிடை செய்வது வேலைக்கார தேனீக்களின் பணியாகும் , ஆன் தேனீக்களுக்கு அதே நிலைமைதான் . மற்ற தேனீக்களை விட ராணி தேனீ பெரியதாக இருக்கும். இந்த தேனிக்கு மகரந்தம் சேகரிக்கும் பையும் கிடையாது மெழுகு சுரப்பி இல்லாததால் கூடு கட்டவும் முடியாது . ராணி தேனீக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறது .
இதன் வேலை கூட்டை சரியான முறையில் நிர்வகித்து கண்காணிப்பதும் முட்டையிடுவதும் மட்டுமே இதன் ஆயுள்காலம் இரண்டிலிருந்து மூன்று வருடம் வரை இருக்கும் மற்ற தேனீக்களை போன்று மகரந்தங்களை உண்ணாமல் ஏழு நாள் முதல் பதினான்கு நாள் தேனீக்களில் ராயல் ஜெல்லி எனப்படும் ஒருவகையான திரவம் சுரக்கும் அதுதான் உணவாக கொடுக்கப்படும் .
ராணி தேனீ பருவத்திற்கு வந்த பின்பு கூட்டை விட்டு வெளியே வந்து உயரே பறக்கும் அதன் விருப்பத்தை தெரிந்த ஆண்தேனீக்கள் பின்னே வரும் எந்த ஆன் தேனீ தான் பறக்கும் சம உயரத்திற்கு வருகிறதோ அதனுடன் மட்டுமே இணையும் . இணைந்த பின்பு ஆன் தேனீ இறந்துவிடும் . பின்பு தொடர்ந்து 2 முதல் 3 வருடங்களுக்கு முட்டை இட்டுக்கொண்டே இருக்கும் . ஒரு நாளைக்கு ஆயிரத்தி அயினூறு முதல் மூவாயிரம் முட்டை வரை இடும் . ஒருவேளை ராணித்தேனிக்கு வயதாகிவிட்டால் மற்றொரு ராணி தேனியை உருவாக்கும் இந்த தேனீ இறந்த உடன் அது ராணியாக மாறிவிடும் .அல்லது திடிரென்று ராணி தேனீ இறந்துவிட்டால் வேலைக்கார தேனீக்களே புதிய ராணியை உருவாக்கும் .
வேலைக்கார தேனீக்கள்
மற்ற இரண்டு தேனீக்களை விட மிக சிறியதாக இருக்கும் . தேனை சேகரிப்பது , கூடு கட்டுவது , கூட்டை பாதுகாப்பது , தேன் கூட்டின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பது , ராணி தேனீ இடும் முட்டையை பராமரித்து புதிய தேனீக்களை உருவாக்குவது இப்படி ஓய்வில்லாமல் பனி செய்வதால்தான் இவை பனி தேனீக்கள் ஆகின்றன . இதன் வயது மொத்தமே 60 நாட்கள்தான் .
தேனீக்களுக்கு 21 முதல் 23 வயது ஆகும் போது மூன்று வகையாக பிரியும்
1) மருத்துவத்தேனீ
மகரந்தம் சேர்த்துவரும் தேனீக்களுக்கு சிகிச்சை அளிப்பது றெக்கை மற்றும் கால் ஒடிந்த தேனீக்களுக்கு சிகிச்சை தரும்
2) சிப்பாய் தேனீ
கூட்டை பாதுகாப்பது இதன் வேலை . எதிரிகள் மற்ற தேனீக்கள் உள்ளே நுழைவதை தடுக்கும்
3) பிணம் தூக்கும் தேனீக்கள்
இறந்த தேனீக்களை கூட்டிலிருந்து வெளியேற்றுவது இதன் வேலையாகும்
ஆன் தேனீ .
இதற்கு எந்த வேலையும் கிடையாது ராணி தேனீயுடன் இணைவது மட்டுமே இதன் வேலை ஒரு கூட்டிற்கு சில ஆன் தேனீக்கள் மட்டுமே இருக்கும் .
0 Comments