Flowering plants, trees and seasons necessary for beekeeping
தேனீ வளர்ப்பிற்க்கு மிகவும் தேவையான ஓன்று பூக்கள் , எந்த மாதங்களில் பூக்கள் அதிகமாக பூக்கும் எந்த மரங்களில் பூக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டால் தேனீ பெட்டியை ஒரு இடத்திலிருந்து பூக்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு மாற்றவும் தேன் அதிகம் கிடைக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி
பொதுவாக பூக்கள் அதிகமாக பூக்கக்கூடிய காலம் ஜனவரி, பிப்ரவரி அதாவது தை மாதம் . தேன் உற்பத்தியாளர்களுக்கு பீக் சீசன் என்றால் ஜனவரி , பிப்ரவரி , மார்ச் மாதங்களாகும் . இந்த மூன்று மாதங்களில் மாமரம் , கொய்யா மரம் , சப்போட்டா , நெல்லி , முருங்கை , முந்திரி எல்லா மரங்களும் இந்த காலத்தில்தான் பூ பூக்கும் . இந்த மாதிரி இடங்களில் தேனீ பெட்டிகள் வைத்தால் தேன் உற்பத்தி அதிகமாகும் . அதே போல் கலை செடிகளும் பூக்க கூடிய களமும் இதுதான். எருக்கம்பூ , தும்பை ,துளசி , நெருஞ்சி முள் முதற்க்கொண்டு இந்த காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும் , தேன் உற்பத்தியும் அதிகமாக எடுக்கலாம் . மலை பகுதிகளாக இருந்தால் காபி இந்த சீசனில் பூக்கும்

மார்ச், ஏப்ரல்
மார்ச், ஏப்ரல் இந்த இரண்டு மாதங்களிலும் காட்டு மரங்கள் எல்லாம் பூக்கும் அதாவது வேப்ப மரம் , குமிழ் மரம் , காட்டு ஆமணக்கு , செம்மரம் , சந்தன மரம் , உசில மரம் போன்ற மரங்கள் பூக்கும் . சீமை கருவேல மரங்கள் இந்த காலகட்டத்தில் பூ பூக்கும்.
மே மாதம்
மே மாதம் மயில் கொன்றை , நாவல் பூக்கும் காலம் நாவல் தேன் இந்த சீசனில் எடுக்கலாம் சரக்கொன்றை மற்றும் கொன்றை மரங்கள் அனைத்தும், புங்கமரம் இந்த புங்க மரத்தில் அதிகம் பூ இருக்கும் தேனும் அதிகமாக கிடைக்கும், மலை பகுதிகளில் மே யில் குறிஞ்சி பூ பூக்கும் .
ஜூன் மாதம்
ஜூன் மாதம் எடுத்து கொண்டால் காட்டு கருவேலம், புளியமரம் பூக்கக்கூடிய காலம் புளியம் பூ தேன் சுவையாக இருக்கும்.
ஜூலை
ஜூலை மாதத்தில் அவ்வளவுவாக பூக்கள் இருக்காது சூரியகாந்தி போட்டால் பூ இருக்கும் . மலை பகுதிகளில் இந்து பூ கொடி இந்த சீசனில் இருக்கும் இதில் தேன் உற்பத்தி அதிகம் இருக்கும் .
ஆகஸ்ட் , செப்டெம்பர் , ஆக்டோபரில்
ஆகஸ்ட் , செப்டெம்பர் , ஆக்டோபரில் தேன் உற்பத்தி இருக்காது. அக்டோபர் பாதி நவம்பரில் யூகலிப்டஸ் மரம் பூக்கும் தைல மரத்தில் தேன் உற்பத்தி அதிகமாக இருக்கும்,
நவம்பர் மற்றும் டிசம்பர்
இலவ மரம் பூ இருக்கும் ஒரு பறவை உக்காந்து தேன் குடிக்கும் அளவிற்க்கு தேன் இருக்கும் . ஜனவரியில் மறுபடியும் அடுத்த பூ பூக்க ஆரம்பிக்கும்
காய்கறி பயிர்கள் எப்பொழுதெல்லா போடுகிறீர்களாளோ அப்பொழுது தேன் கிடைக்கும் . எண்ணைவித்து பயிர்களில் அதிகளவு தேன் கிடைக்கும் . துவரை , அவரை,உளுந்து தட்டைப்பயறு , சோளம் போன்ற மானாவாரி பயிர்களில் மகரந்தம் அதிகம் இருப்பதால் தேன் நிறைய கிடைக்கும் கிடைக்கும் .
மாதம் 12 டும் பூக்கும் தங்க அரளி , அரளியில் நிறைய வகை உண்டு செவ்வரளி மஞ்சள் அரளி தேனீ உக்காராது . ஆனால் தங்க அரளியில் தேனும் எடுக்கும் மகரமும் எடுக்கும் . அடுத்து ஆண்டிகோனான் இது கொடி வகையை சார்ந்தது இதுவும் வருடம் முழுவதும் பூக்கும் தேனீக்களுக்கு உணவு கிடைக்கும்
0 Comments