Ad Code

தேனீக்களின் பாதுகாப்பும் அவற்றின் எதிரிகளும்

The protection of bees and their enemies



தேனீ வளர்ப்பில் ஒரு முக்கியமான பகுதி தேனீக்களோட பாதுகாப்பு . தேனீ தானாகவே கூடு கட்டும்பொழுது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்துதான் அது கூடு கட்டும் . ஆனால் , நாம் தேனுக்காக வளர்க்கும் பொழுது அதன் பாதுகாப்பு விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் . அதன் பாதுகாப்பு பற்றி பார்ப்போம் .

எறும்பு



தேனீ பெட்டி வைக்கும்பொழுது கண்டிப்பாக எறும்பு இல்லாத இடமாக பார்த்து வைக்க வேண்டும். தேனியோட முதல் எதிரி எறும்புதான் . தேனீ பெட்டியை ஒரு ஸ்டாண்ட் மீது வைக்கலாம் அதை சுற்றியும் ஸ்டாண்ட் மீதும் எறும்பு சாக்பீஸ் போடலாம் அல்லது ஸ்டாண்ட்க்கு கிழே சின்ன கப்புல தண்ணீர் ஊற்றி வைக்கலாம் . முடிந்தளவு எறும்பு மருந்து  போடுவதை தவிர்த்து விடுங்கள் . அதற்க்கு பதில் மஞ்சத்தூள்  அல்லது மிளகாய்ப்பொடி போடலாம் , அடுப்பு சாம்பல் போடலாம் 

பல்லி , ஓணான் 



வீடுகளிலோ , தோட்டங்களிலோ தேனீ பெட்டி வைக்கும்பொழுது பல்லி , ஓணான்  ஒரு முக்கிய எதிரி . பல்லி  வராமல் இருப்பதற்க்கு நாட்டு கோழி முட்டையோட ஓட்டை பெட்டி மீது வைத்துவிட்டால் பல்லிகள் வருவதில்லை அதயும் மீறி வந்தால் ஸ்டாண்டில் கிரீஸ் தடவி வைக்கும் பொழுது வராமல் தடுக்கலாம். ஓணான் வருவதை தடுக்க ஸ்டாண்டுக்கு மேல் ஒரு தகரத்தை வைத்து பெட்டியை வைக்கும்பொழுது தடுக்கலாம் 

கதண்டு 



காட்டு பகுதி , தென்னை மர தோப்புகளில் வைக்கும் பெட்டிகளுக்கு  இதன் தாக்குதல் இருக்கும் . ஒரு முக்கியமான எதிரி என்று சொல்லலாம். ஒரு கதண்டு இரண்டு தேனீக்களை பிடித்து கொண்டுபோய்விடும் தேன் மெழுகையும் எடுத்துக்கொண்டு போய்விடும் . தினமும் இதன் தொந்தரவு இருந்தால் தேனீக்கள் கூட்டை காலி செய்து போய்விடும் . முடிந்தளவு கதண்டு இல்லாத பகுதிகளில் வைக்கலாம் .  ஒரு பெரிய தட்டுல  முதல் நாள் இனிப்பு கரைசல் வைக்கலாம் இரண்டாவது நாள் கதண்டு ஒரு நான் வெஜ்டேரியன்  கொஞ்சம் மாமிசத்தை வைத்து நீர் ஊற்றி கொஞ்சம் எறும்பு பொடியை தூவி வைத்தால் கதண்டு வராது . இதையும் மீறி கதண்டின் தாக்குதல் இருந்தால் ஏதாவது ஒன்றை பிடித்து அதன் முதுகின் மேல் பெவிஸ்டிக்  வைத்து tube மாத்திரையில் குருணை மருந்து வைத்து ஒட்டி விட்டால் அது பறந்து கூட்டுக்கு போகும் பொழுது அந்த கூடு காலியாகிவிடும் . இல்லையென்றால் அதன் கூட்டை கவனித்து அளிக்க வேணடும் . இரவில்தான் அளிக்க முடியும் அதிக விஷத்தன்மை கொண்டதும்  கூட  . 

வெளிச்சம் 


தேனீக்களுக்கு வெளிச்சம் ஆகவே ஆகாது பெட்டிகளை நிழலில்  வைக்கவேண்டும் . இரவு நேரம் லைட் உள்ள இடத்தில் வைக்கக்கூடாது . வெளிச்சம் இல்லாத இருட்டாக உள்ள பகுதிகளில்தான் தேனீக்கள் வாழும் . இந்த அடுக்கு தேனீயின் குணமே இருட்டான பகுதிகளில் , புதர்களில் , பொந்துகளில் போன்ற இடங்களில் கூடுகட்டி வாழக்கூடிய ரகம் இது 
Reactions

Post a Comment

0 Comments