தேனீ வளர்ப்பு - Beekeeping
மழை வெயில் மற்றும் காற்றடி காலத்தில் செய்யவேண்டியவை - Things to do during rainy and windy seasons For Bees
பொதுவாக ஆடி மாசத்தில் பயங்கரமாக காற்று அடிக்கும் இந்த காற்றடி பருவத்தில் தேனீக்களால் பறந்து சென்று தேன் எடுக்க முடியாது கஷ்டப்படும். தேன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்யலாம்மென்றால் இந்த காற்றடி பருவம் வந்துவிட்டால் தேனீ வளர்ப்பவர்கள் தேனீக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் . 1:1 என்ற அளவில் தன்னீர் மற்றும் சக்கரை கலந்து அதை தேனீக்களுக்கு உணவாக கொடுக்கலாம் அல்லது இனிப்பு சம்பத்தப்பட்ட எதுவேண்டுமானாலும் தேனீக்களுக்கு கொடுக்கலாம் உதாரணமாக கரும்பு சாறு கொடுக்கலாம் அல்லது தேனில் ஊறவைக்ககிற நெல்லிக்காயில் முதலில் அது புளிப்பு தன்மையுடன் நீர்த்து போய்விடும் அந்த தேனை உணவாக கொடுக்கலாம். ஒருவேளை உணவு கொடுக்கவில்லையெனில் ராணி தேனீ முட்டை குறைந்து தேனீக்கள் எணிக்கையும் குறைந்து ஆடையில் ஒன்றும் இருக்காது இதை தவிப்பதற்க்கு நாம் ஆடி மாதத்தில் உணவு கொடுக்க வேண்டும்
தேனிக்கு உணவு கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை - Things to look out for when feeding bees
உணவு கொடுப்பதற்கு நாம் கொட்டாங்குச்சி அல்லது பிளாஸ்டிக் தட்டு எது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் அதில் சக்கரை தண்ணி ஊற்றும் பொழுது தேனீ அதில் பக்கவாட்டில் இறங்கித்தான் எடுக்கும் அப்படி எடுக்கும்பொழுது வழுக்கி உள்ளே விழுந்துவிட்டால் மேலே ஏறி வருவதற்கு ஒரு கிரிப்பாக தேங்காய் நாரை வைக்கலாம். அப்படி வைக்கும் பொழுது தேனீ விழுந்தாலும் பிடித்து மேலே பறந்து வந்துவிடும். இந்த உணவு கொடுப்பது காற்றாடி காலத்துக்குமட்டுமில்லை மழைக்காலம் மற்றும் அதிக வறட்சி உள்ள வெயில் காலங்களிலும் கொடுக்கலாம் . இல்லையெனில் தேனீக்கள் கலைந்து போய்விடலாம் அல்லது.
தங்க அரளி அல்லது பொன்னரளி மரம் - Golden Arali or Ponnarali tree
இதை ஓரளவுக்கு தடுக்க வருடம் முழுவது பூக்க கூடிய மரத்தின் அருகில் தேனீ பெட்டியை வைக்கலாம் . தங்க அரளி அல்லது பொன்னரளி மரம் வருடம் முழுவதும் பூக்க கூடிய மரமாகும் மாதம் பண்ணிரெண்டும் அதில் பூக்கள் இருக்கும் நன்றாக வளர்ந்த மரத்தில் குறைந்தது ஆயிரம் பூக்கள் இருக்கும் அந்த பூக்கள் கொட்ட அடுத்த பூக்கள் மலந்து கொன்டே இருக்கும் . இந்த மரத்தை 5 மரம் வைத்தால் வருடம் முழுவதும் தேனீக்களுக்கு உணவு கிடைத்து கொண்டே இருக்கும். தேனியை பொறுத்தவரை மகரந்தம் ஒரு அவசியமான உணவு மற்றும் ப்ரோட்டீன் உணவு அதற்கு தேவை அதற்காக ஆன் பூக்களில் உள்ள மகரந்தத்தை எடுத்து வந்து கூட்டில் சேமித்து வைத்திருக்கும்
0 Comments