Subsidies and loans for beekeeping
தேனீ வளர்ப்பிற்கான மானியங்களும் மற்றும் கடன்களும்
இன்றய சூழ்நிலையில் விவசாயத்திற்கான உப தொழில்களில் முக்கியமானது தேனீ வளர்ப்பு. வயல்களிலோ அல்லது தோட்டங்களிலோ தேனீ பெட்டி வளர்ப்பதால் அதிக மகசூல் கிடைக்கிறது அதனால் விவசாயிகளுக்கு நல்ல வருமானமும் , மேலும் தேனும் கிடைப்பதால் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. இந்த தேனீ வளர்ப்பை தனிப்பட்ட தொழிலாகவும் செய்து வருகின்றனர் நாம் இந்த தேனீ வளர்ப்பில் உள்ள மானியங்களை பற்றி தெரிந்துகொள்வோம் .
மானியத்தில் தேனீப்பெட்டிகள்
நீங்கள் விவசாயிகளாக இருந்தால் , மரப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள் இந்தமாதிரி விவசாயம் செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறையும் 40 சதவீதம் மானியத்தில் தேனீக்களோடு தேனீ பெட்டிகள் மற்றும் ஸ்டாண்ட் அனைத்தும் மானியத்தில் கிடைக்கும்
இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது அந்த அந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி மகசூலுக்காக தேனீ பெட்டி
வேண்டும்மென்று பதிவு செய்ய வேண்டும் . அந்த பதிவின் அடிப்படையில் மானியத்தில் தேனீப்பெட்டிகள் கிடைக்கும் அந்த பதிவின் அடிப்படையில் இந்த திட்டத்திற்க்கு நீங்கள் தகுதியானவர்கள் எனில் மானியத்தில் தேனீப்பெட்டிகள் கிடைக்கும் ஒரு நபருக்கு 2 பெட்டியிலிருந்து 10 தேனீ பெட்டிவரை கிடைக்கும் ஒரு விவசாயிக்கு ஒரு பெட்டிக்கு 1600 ரூபாய் மானியம் கிடைக்கும்.
பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம்
இத்திட்டத்தின் கீழ் தேனீக்கள் வளர்ப்பதற்கு மானியங்கள் கொடுக்கப்படுகிறது காதி, KVIC , மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் அணுகலாம் . பெண்களுக்கு 35 சதவீதமும் ஆண்களுக்கு 25 சதவீதமும் மானியம் உண்டு . இதற்கு எல்லாம் இருக்கவேண்டும் என அவசியம் இல்லை, நிலத்தை லீசுக்கு எடுத்து கூட இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் . தோட்டக்கலை துறையை எடுத்துக்கொண்டால் 10 பெட்டி வரை அதிகமாக வாங்கலாம் ,
தேனீ வளர்ப்பு மது மக்சிகா பலன் (தேனீ வளர்ப்பு) - Benefit of beekeeping wine Maxika (beekeeping)
ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி - IDBI Bank
ஐ.டி.பி.ஐ வங்கி தவணை கடன்களை தனி விவசாயிகள் / விவசாயிகள் அல்லாதோர், குழு விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கூட்டு நிறுவனம் / தனி நிறுவனம், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. தேன் உற்பத்திச் செயலகம் அமைப்பதற்கு கடன்கள் வழங்கப்படுகிறது. மானியங்கள் DRDA/KVIC/KVIB ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது. கடன்களை 5 முதல் 7 வருடங்களில் காலாண்டு / அரையாண்டு தவணைகளில் 11 மாத இடைவெளி காலத்தையும் சேர்த்து திருப்பிச் செலுத்தவேண்டும்.
0 Comments