தேனீ வளர்ப்பு - தேனீ வகைகள்
Beekeeping - Types of Bee species
உலகம் முழுவதும் பலவகையான தேனீக்கள் தேனுக்காக வளர்க்கப்படுகிறது உதாரணமாக மஞ்சள் காகசியன், மத்திய ரஷ்யன், மவுண்டன் கிரே காகசியன், இத்தாலிய தேனீ போன்ற தேனீ இனங்கள் உள்ளன இதில் இத்தாலிய தேனீ மட்டும் இந்தியாவில் வளர்க்கப்படுகிறது
இந்தியாவை பொறுத்தவரை ஐந்து வகையான தேனீக்கள் உள்ளன
1) மலைத்தேனீ
2) கொம்புத்தேனீ
3) இந்தியத்தேனீ
4) இத்தாலிய தேனீ
5) கொசுத்தேனீ
மேலே குறிப்பிட்ட முதல் நான்கு வகை மட்டும்
1) மலைத்தேனீ அல்லது பாறை தேனீ - Rock bee
எப்பிஸ் டேர்சாட்டா எனப்படும் இவ்வகை தேனீக்கள் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மலை மற்றும் காடுகளில் காணப்படுகின்றன . பெரிய கட்டடங்களில் கூடு கட்டும், ஒரு அடையின் அளவு 2 அடி முதல் 5 அடிவரை இருக்கும் அடிக்கடி இடம் விட்டு இடம் மாறக்கூடியது . இவ்வகை தேனீக்கள் அதிக விஷ தன்மை கொண்டது கையாள்வது சிரமம் பெட்டியில் வளர்க்க முடியாது .
2) கொம்புத்தேனீ - Horned bee
எப்பிஸ் புளோரியா என்று அழைக்கப்படும் ஆசிய நாடுகளில் அதிகமாக உள்ளன . இவ்வகை தேனீக்கள் உருவத்தில் சிறியதாக இருக்கும் மரக்கிளைகளிலோ அல்லது புதர்களிலோ கூடு கட்டி வாழும், ஒற்றை அடையாக கட்டும் , தேன் குறைவாக கிடைக்கும் கொட்டும் தன்மை உடையது இந்த வகை தேனீக்களும் பெட்டிகளில் வைத்து வளர்ப்பதற்க்கு உகந்தது அல்ல .
3) இந்தியத்தேனீ அல்லது அடுக்குத்தேனீ - Indian bee
பல காலமாக கட்டுப்படுத்தப்பட்டு பெட்டியில் வளர்க்க ஏற்றதாக உள்ள வகையாகும். மலைத்தேனீக்களை விட சிறியதாகவும் கொம்புத்தேனீயையைவிட பெரியதாகவும் இருக்கும் நிறைய தேன் அடைகளை கட்டும் தன்மை கொண்டது 10 முதல் 20 கிலோ வரை வருடத்திற்கு தரக்கூடியது . வெளிச்சம் குறைவான இடங்களான பாறை இடுக்கு, மரப்பொந்து போன்ற இடங்களில் கூடு கட்டும் . கொட்டும் தன்மையுடையது . தமிழ் நாட்டிற்கு ஏற்ற வகையாகும்
4) இத்தாலிய தேனீ - Italian bee
இது ஒரு இத்தாலியிலிருந்து இந்தியாவிற்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட வகையாகும் இத்தேனீயின் உடல் அமைப்பு கொஞ்சம் பெரியது . தேன் சேகரிப்பு திறனும் அதிகம். சூரியகாந்தி பயிர் செய்யப்படும் இடங்கள் இவ்வகை தேனிக்கு உகந்தது மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட வகையாகும் . இதையும் பெட்டியில் வைத்து வளர்க்கலாம் .
சுமார் 20 இருந்து 25 கிலோ வரை வருடத்திற்கு தேன் எடுக்கலாம் . வட இந்திய பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது
5) கொசுத்தேனீ
எப்பிஸ் மெலிபோனா இந்தவகை தேனீக்கள் கொசுவை போன்று மிக சிறியதாக இருக்கும் Dammer Bee என்றும் அழைக்கப்படுகிறது. சின்ன மரப்பொந்து , சுவர் இடுக்கு போன்ற இடங்களில் கூடுகட்டி வாழும் ,மண் மற்றும் பிசின் கலந்த துளைகள் காணப்படும். இதன் தேன் மருத்துவ குணம் கொண்டதாகும்.
0 Comments