தேனீக்களின் வாழ்க்கை சுழற்சி
தேனீ வளர்ப்பில் நீங்கள் முக்கியமாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய ஓன்று தேனீக்களின் வாழ்கை சுழற்சி . அப்பொழுதுதான் தேனீக்களின் அளவை நாம் தக்கவைத்து கொள்ளமுடியும் . இதில் நீங்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது வேலைக்கார தேனீக்கள்தான் எந்த தேனீ ஆண் தேனியாகவும் , எது வேலைக்காரத்தேனீ எது ராணி தேனீ என்பதை தீர்மானிக்கின்றன .
தேனீக்களின் வாழ்க்கை சுழற்சி நான்கு விதமான கட்டங்களை கொண்டது
1) முட்டை
2) புழு
3) கூட்டு புழு
4) அடல்ட்
முட்டை பருவம்
ஒரு ராணி தேனீ ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 முட்டைகளை இடும். ராணி தேனீ வளமுள்ள மற்றும் வளமற்ற முட்டைகளை இடும் .வளமுள்ள முட்டை வேலைக்கார தேனீக்களாகவும் , ராணி தேனியாகவும் வளமற்றது ஆண் தேனியாகவும் மாறும் .
புழு பருவம்
முட்டை இட்ட மூணாவது நாளில் வேலைக்கார தேனியா அல்லது ராணித்தேனியா என்று முடிவு செய்யப்படும் ஆறாவது நாள் புழுக்கள் வெளிவரும் . புழுக்களுக்கு முதல் மூணு நாட்களுக்கு "ராயல் ஜெல்லி" உணவாக தரப்படும். பின்பு பெண்களுக்கு மட்டும் தரப்படும் . புழுக்கள் கூட்டு புழுவாக மாறியவுடன் வாக்ஸ் வைத்து வெளிக்கறதெனிகள் மூடிவிடும் .
கூட்டு புழு பருவம்
இந்த பருவத்தில் தேனீக்களுக்கு ரெக்கை , கண்கள் , கால்கள் உருவாகும்
அடல்ட் பருவம்
முழு வளர்ச்சி அடைந்தவுடன் தேனீயாக வெளியே வரும் . ராணி தேனியாக இருந்தால் முட்டை இட்ட 16 வது நாளும் , வேலைக்கார தேனீயாக இருந்தால் 18 முதல் 22 வது நாளும் ஆன் தேனியாக இருந்தால் 24 வைத்து நாளும் வெளிவரும்
0 Comments